விஸ்வரூபமெடுக்கும் போதை பொருள் விவகாரம்-சிக்கிய சில முக்கிய புள்ளிகள்
1750917470733

போதைப்பொருள் வழக்கு கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீகாந்தை சிக்க வைத்த பிரதீப் என்பவர் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதனால் கழுகு திரைப்பட ஹீரோ கிருஷ்ணாவும் இந்த போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். அவர் பற்றி ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்த போது இவர் ஊரில் இல்லை. இதையடுத்து, அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. கிருஷ்ணா, தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு அப்ஸ்காண்ட் ஆனதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இறுதியில் அவரை பிடித்த போலீஸார், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார் கிருஷ்ணா. அப்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த போதை பொருள் விவகாரத்தில் மேலும் பல திரை பிரபலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர் .