‘பார்பி’ உலகத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்- எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

photo

‘பார்பி’ கடந்த மாதம் 21ஆம் தேதி கிரேட்டா கெர்விக் இயக்கி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பார்பி பொம்மையை மைய்யமாக வைத்து தயாரான இந்த படத்தில் மார்காட் ராபி பார்பியாகவும், ரயான் காஸ்லிங் கென்னாகவும் நடித்துள்ளனர் மேலும்  இந்த படத்தில் அமெரிக்கா பெரைரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளானர்.  ஓபன்ஹைமர் படத்திற்கு போட்டியாக திரையிடப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ஒரு பெண் இயக்குநர் இயக்கி பில்லியன் டாலர் கடந்து வசூலித்த முதல் படம் பார்பி.  இந்த நிலையில் பார்பி லேண்டில் கோலிவுட் ஸ்டார்கள் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை காட்டும் வகையில் அழகிய எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

photo

அதில் முதலாவதாக கென்னாக மாறிய உலக நாயகன்  கமல்ஹாசன். சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் பிங்க் நிற கேட் சூட் அணிந்து கனகச்சிதாமாக கதாபத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார்.

photo

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பக்காவான ஹேர் ஸ்டைல் பிட்டான பாடி என கென்னாக மாறியுள்ளார் ரஜினி.

photo

தல அஜித் மங்காத்தா பட லுக்கில் கென்னாக மாறி அசத்தியுள்ளார்.

photo

தளபதி விஜய் செம கியூட் லுக் பிங்க் சட்டை என கென்னாக உள்ளார்.

photo

சியான் விக்ரம் அந்நியன் பட ரெமோ போல ரோஜா பூக்களுடன் கென்னாக மாறியுள்ளார்.

photo

நடிகர் தனுஷ் அவருக்கே உரிய ஸ்டைலில் கென்னாக உள்ளார்.

photo

நடிகர் சூர்யா, பார்வையில் காதல் ரசம் சொட்ட சொட்ட கென்னாக மாறி போஸ் கொடுத்துள்ளார்.  

photo

நடிகர் சிவார்த்திகேயன் ரெமோ படலுக்கில் கென்னாக மாறி உள்ளார்.

photo

நடிகர் சிம்பு, எக்கசக்கமான பார்பி பொம்மைகளுக்கு நடுவில் கென்னாக மாறி போஸ் கொடுத்துள்ளார்.இந்த எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

Share this story