இணையத்தில் வைரலாகும் இயக்குநர்களின் மீட் அப் புகைப்படம் - என்ன காரணம் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் சமூக கட்டமைப்பில் சினிமாவுக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த வகையில் பல திரைப்படங்கள் சமூக பொறுப்புடனும், வாழ்வியலை தொடர்பு படுத்தியும் எடுக்கப்பட்டு வருகிறது. அதனாலேயே குறிக காலகட்டத்தில் இயக்குநர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனர். இந்த நிலையில் தற்போது கோலிவுட் இயக்குநர்களின் மீட் அப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் இயக்குநர்கள், மணிரத்தினம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், லிங்குசாமி, கௌதம்மேனன்,லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சசி ஆகியோர் உள்ளனர். இந்த சந்திப்பு இயக்குநர் மணிரத்தினம் வீட்டில் நடந்துள்ளது. புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த ஷங்கர் “இந்த ஸ்பெஷலான தருணத்திற்கு நன்றி மணி சார்! நினைவுகளை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி கார்த்திக் பாடிய இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் பாடல்களுக்கு வைப் செய்ததில் மகிழ்ச்சி இதுதான் நான் சம்பாதித்த உண்மையான சொத்தாக உணர்கிறேன் அன்பான உபசரனைக்கு நன்றி சுஹாசினி” என பதிவிட்டுள்ளார்.