தந்தையின் பாணியை கையில் எடுத்த விஜய்காந்தின் மகன்- படக்குழுவினர் மகிழ்ச்சி

s

பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவான கொம்புசீவி படம் திறைவடைந்ததை ஒட்டி விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் படக்குழுவினருக்கு விருந்து வைத்து கொண்டாடினார்.

Image

தமிழ் சினிமாவில் கிராமத்து சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். 

Image

இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, தனது தந்தை பாணியில், 'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி அவர் கௌரவித்துள்ளார் சண்முகபாண்டியன்.  விஜயகாந்த்தும் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர். 

Image

இது குறித்து பேசிய சண்முகபாண்டியன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தை. அவரது அடிச்சுவற்றை பின்பற்றி 'கொம்புசீவி' படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக இன்று உணவையும், உடைகளையும் பகிர்ந்து கொண்டேன்" என்றார். 

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குநர் அன்பு இயக்கத்தில், இசையமைப்பாளர் இளையாராஜா இசையில் உருவாகியுள்ள படைத்தலைவன் திரைப்படம் பல்வேறு இடங்களில் நேற்று வெளியானது. நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் முதல் திரைப்படமாக சகாப்தம் வெளியான நிலையில் இரண்டாவது திரைப்படமாக படைத்தலைவன் வெளியானது. 

Share this story