இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் தமிழ் படம்!

koolangal-2

தமிழில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு ஒரு திரைப்படம் அனுப்பப்படும். இந்தியாவில் பல மொழிகளில் இருப்பதால் பல மொழிகளில் உள்ள படங்கள் ஆஸ்கர் பரிந்துரை போட்டிக்கு அனுப்பப்படும். இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் பரிந்துரைக்காக 15 படங்கள் போட்டியிட்ட நிலையில் தமிழில் வெளியான கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்ப இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா, சர்தார் உதம்’, மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு ஆகிய படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

koolankal-2

நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ் சிவன் ஜோடியின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் கூழாங்கல் படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர்.   இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். குடிகார தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவுகளை பேசும் இப்படம் பல சர்வதேச விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

தற்போது ஆஸ்கர் பரிந்துரைக்கும் கூழாங்கல் தேர்வாகியுள்ளது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story