கமல் பட வசூலை முறியடித்த கூலி -எத்தனை கோடி தெரியுமா ?
நடிகர் ரஜினி நடித்த கூலி படம் வெளி நாடொன்றில் கமல் பட வசூல் சாதனையை முறியடித்து வசூலை வாரி குவித்து புதிய சாதனை புரிந்துள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 14-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது.'பான் இந்தியா' படமாக வெளிவந்த இதில், அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி முதல் 4 நாட்களில் உலக அளவில் ரூ.404 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இதனால், படம் எதிர்பார்த்ததுபோல வெற்றி பெற்று ரூ.1000 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், வார நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது.
தற்போது, 'கூலி' படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், உலக அளவிலான வசூல் விவரம் வெளிவந்துள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.675 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வட அமெரிக்காவில் மட்டும் 6.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.56 கோடியை வசூல் செய்துள்ளது.
அங்கு கமல்ஹாசன் படம்தான் இதுவரை அதிகம் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்போது அந்த சாதனையை 'கூலி' முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

