கோடிகளில் புரளும் ரஜினியின் "கூலி" -வெளிநாட்டு உரிமை இத்தனை கோடியா ?

Koolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
இந்தப் படத்தில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட உள்ளன. அந்த வகையில் இந்த வாரம் கூலி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. . 
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும்  தீவிரமாக நடைப்பெற்று வருகிறது 
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது 
ஓவர்சீஸில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் என்கிற சாதனையை கூலி படைத்துள்ளது. அண்மையில் வெளியான தக் லைஃப் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அவற்றையெல்லாம் ஓவர்டேக் செய்யும் விதமாக 81 கோடிக்கு ஓவர்சீஸ் ரைட்ஸை விற்பனை செய்து மாஸ் காட்டி உள்ளது கூலி படக்குழு.

Share this story