வெளிநாடுகளில் முன் பதிவில் சாதனை புரியும் கூலி-எத்தனை கோடி தெரியுமா ?

Kooli
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கூலி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் , ஷோபின் ஷாஹீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். 
ரஜினிகாந்த் கூலி இசை வெளீயீட்டு விழாவில் பேசும் போது, லோகேஷ் கனகராஜ் இயக்கிய சில படங்களை பற்றி பேசினார். அதில், ஒவ்வொரு படம் குறித்தும் தான் கேட்ட விஷயங்களை தெரிவித்தார். மாநகரம் படத்தில் இருந்து ஆரம்பித்த அவர், கைதி குறித்து பேசினார். அதன் பிறகு நேராக விக்ரம் குறித்தும், பின்பு கூலி குறித்தும் பேசினார்.கைதி படத்திற்கு அடுத்து லோகேஷ் இயக்கியது மாஸ்டர். இதைப்பற்றியும், விக்ரம் படத்தை அடுத்து இயக்கிய லியோ படத்தை பற்றியும் லோகேஷ் கனகராஜ் பேசவில்லை. இதை பற்றி ரசிகர்கள் தற்போது இணையத்தில் பேசி வருகின்றனர்.
ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது இப்படம் . வெளிநாடுகளில் கூலி படத்தின் முன்பதிவு படு ஜோராக நடிபெற்று வரும் நிலையில் இதுவரையில் மட்டும் ரூ.14 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது. வட அமெரிக்காவில் மட்டும் கூலி ரூ.9.8 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் முன்பதிவு விற்பனையின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story