முன்பதிவில் ஐம்பது கோடிகளை தாண்டிய கூலி -பல ஊர்களில் வரவேற்கும் ரசிகர்கள்

Kooli

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.அப்புகைப்படத்தின் பின்னணியில் கூலி படத்தின் ரஜினிகாந்தின் கண்கள் திரையில் உள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், மதுரை அரசரடி பகுதியில் இருக்கக்கூடிய சோலைமலை திரையரங்கில் மதுரை மாநகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கம்போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என முதல் நாள் முதல் காட்சி நடைபெறும் என்றும் திரையரங்கில் வாங்கிய விலைக்கே ரசிகர்களுக்கு கூலி படத்தின் ரசிகர் சிறப்புக் காட்சி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Share this story