வாரிசு படத்திற்கு முன்,பின் என சினிமாவை மாற்றி விடாதீர்கள்; முன்னணி இயக்குநர்களின் கடும் கண்டனம்.

photo

வாரிசு பட சர்ச்சை குறித்து கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான லிங்குசாமி மற்றும் பேரரசு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.  

வாரிசு பட சர்ச்சை குறித்து திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  இயக்குநர்கள் லிங்குசாமி மற்றும் பேரரசுவிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் தங்கள் தரப்பு கண்டனத்தையும், படக்குழுவிற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

photo

அதில் அவர்கள் கூறியதாவது "இன்றைய காலக்கட்டம் தான் சினிமாவின் பொற்காலம். பான் இந்தியா மார்க்கெட், ஓடிடி தளங்கள் வந்துள்ளதால் இங்கே யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது. இந்தமாதிரியான சூழலில் விஜய்யின் வாரிசு படத்துக்கு இப்படியெல்லாம் சிக்கல் வரக் கூடாது. வாரிசு படத்துக்கு தியேட்டர் தரமாட்டோம் என  சொன்னால், அது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கான  பிரச்சனை பெரிதாகி விடும். அதாவது வாரிசு படத்துக்கு முன்னும் பின்னும் என விஸ்வரூபமெடுக்கும், தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் இதுபற்றி பேசி இதற்கு சுமுகமான முடிவு எடுக்க வேண்டும். இரண்டு மொழி படங்களுமே தமிழ், தெலுங்கு என்ற பாகுபாடு இல்லாமல் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இது ஒரு சின்ன சலசலப்பு தான், கண்டிப்பா எல்லாம் விலகிவிடும். அப்படியும் இல்லையென்றால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கான தீர்வை கொண்டு வருவோம்" என தங்கள் குரலை பதிவு செய்துள்ளனர்.

photo

இந்த நிலையில் இவர்களின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

Share this story