ஓடிடி தளத்தில் சாதனை படைத்த கூச முனுசாமி வீரப்பன் தொடர்

ஓடிடி தளத்தில் சாதனை படைத்த கூச முனுசாமி வீரப்பன் தொடர்

தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் வீரப்பன். சந்தன மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தியது, கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் மீது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. மூன்று மாநிலங்களுக்கு சவாலாக இருந்த அவரை கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு அதிரடிப்படை தலைவர் விஜய்குமார் தலைமையிலான போலீசார் சுட்டுக் கொன்றனர். வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தமிழகத்தின் ஒகேனக்கல் முதல் கர்நாடகாவின் குடகு மலை வரை சுமார் 200 கிலோமீட்டருக்கு மேல் வீரப்பனை போல காடுகளை அளந்து நடந்தவர் யாருமில்லை. அப்படிப்பட்ட வீரப்பன் குறித்து பல ஆவணப் படங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில்ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் கூச முனுசாமி வீரப்பன். இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். 

ஓடிடி தளத்தில் சாதனை படைத்த கூச முனுசாமி வீரப்பன் தொடர்

உலக அளவில் வெளியான இந்த தொடர் சுமார் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து சாதனை படைத்து உளஅளது. இதன் 2-வது சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. 
 

Share this story