சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கொட்டுக்காளி’ படத்தின் ஃபஸ்ட் லுக் டீசர் வெளியீடு.

photo

சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

photo

photo

 கூழாங்கல் படத்தின் இயக்குநரான பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் திரைப்படம் ‘கொட்டுகாளி’. இதற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அவரே படத்தையும் தயாரிக்க உள்ளார்.

photo

 47 நொடிகள் கொண்ட இந்த டீசரில், சூரியுடன் இணைந்து பிரபல மலையாள திரைப்படங்களான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ஆனா பென் நடிக்கவுள்ளார். அவர் சேவலுடன் ஒரு வண்டியில் அமர்ந்திருக்க, அவரை ஒருவர் கைய்யை பிடித்து அழைக்கிறார், ஆனால் கோபமாக அவர் அமைந்திருக்கிறார். மற்றொரு பக்கம் சூரி புகைப்பதும் இடம்பெற்றுள்ளது. சேவலை மைய்யமாக வைத்து இந்த படத்தின் கதைகளம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகவுள்ள 6வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story