‘கொட்டுக்காளி’; ஒ.டி.டி. அப்டேட் வெளியீடு
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இப்படத்தைக் கூழாங்கல் பட இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்க சூரியோடு இணைந்து மலையாள நடிகை அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கமல், வெற்றிமாறன், மிஷ்கின், பாலா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி இருந்ததால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சிம்ப்ளி சவுத் ஓ.டி.டி. தளத்தில் வருகிற 27ஆம் தேதி இந்தியாவை தவிர்த்து உலகம்முழுவதும் இப்படம் வெளியாகவுள்ளது.