கண்ணன் ரவி தயாரிப்பில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் ‘செங்குலம்’.-யார் இயக்குனர் தெரியுமா ?

gautam karthik

கண்ணன் ரவி குழுமத்தின் தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படம், ‘செங்குலம்’. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கின்றனர். சின்னசாமி பொன்னையா திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.மோகன், வைரபாலன் இணைந்து அரங்குகள் அமைக்கின்றனர். தமிழரசன் எடிட்டிங் செய்கிறார். பான் இந்தியா படமாக உருவாகிறது.

Share this story