‘அசத்தப்போவது யாரு’ பிரபலம் கோவை குணா காலமானார்.

photo

பிரபல ஸ்டாண்டப் காமெடியனான கோவை குணா உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு  வயது 54.

photo

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்சியான, அசத்த போவது யாரு மூலமாக  நடிகர் கவுண்டமணிபோல மிமிக்கிரி செய்து 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள்  மத்தியில் பிரபலமானவர் கோவை குணா.  இவர் ‘சென்னை காதல்’ எனும் படத்திலும் நடித்துள்ளார்.  தொடர்ந்து பல தனியார் நிகழ்சிகள், கோவில் திருவிழாகளில் ஸ்டாண்டப் காமெடி செய்துவந்தார்.

photo

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை மோசமடையவே, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மரணம் சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Share this story