கிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயர் பரம்பரை’.. மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
கழுகு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா, குறிப்பிட்ட இடைவெளியில் சிலபடங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராயர் பரம்பரை’. ராம்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சரண்யா நாயர், அனுசுலா, கிருத்திகா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

செண்டிமென்ட் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, பவர் ஸ்டார், தங்கதுரை, ஷாலு ஷம்மு உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் நடித்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரித்துள்ளார்.

தயாரிப்பு பணிகள் நடைபெற்று இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்காக பணிகளில் படக்குழு வேகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராயர் பரம்பரை படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

