"சினிமாவின் ராஜாக்களாக மாறி வரும் ஓடிடி" -குபேரா தயாரிப்பாளர் வேதனை

kubera
இப்போதெல்லாம்  தியேட்டரை நம்பி படம் எடுப்பதை விட , ஓடிடி தளங்களை நம்பியே படம் எடுக்கின்றனர் . தியேட்டரில் பெரிதாக படங்கள் ஓடாத நிலையில், மக்கள் வீட்டில் இருந்து பார்க்கும் ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்று விட்டாலே போட்ட காசை எடுத்து விடலாம் என்பதால், ஓடிடி நிறுவனங்கள் சொல்பேச்சைக் கேட்க தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாக அவர்கள் வைப்பது தான் சட்டம் என்று ஆகிவிட்டதாக பல தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .
தனுஷின் குபேரா படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யவே திட்டமிட்டு இருந்தோம்.. ஓடிடி நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த மாதமே படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளோம் .ஓடிடி தளங்கள் ரிலீஸ் தேதியை முடிவு செய்கின்றன. ஜூலை மாதத்தில் ஒரு தேதியைக் கேட்டோம். ஆனால் அவர்கள் ஜூன் 20 அன்று வெளியிடச் சொன்னார்கள். இல்லையென்றால்,சில கோடிகளை குறைத்து வாங்குவோம் என்கின்றனர் என குபேரா படத்தின் தயாரிப்பாளர் சுனில் நரங் பகீர் கிளப்பியுள்ளார் 
 . குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்போது, இந்த தளங்களை நம்பி நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம். மெதுவாக, அவர்கள் சினிமாவின் ராஜாக்களாக மாறி வருகின்றனர். படம் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்றார்

Share this story