'குபேரா' : ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட சூப்பர் அப்டேட்...!
1731240016000
நடிகர் தனுஷின் 51-வது படமான 'குபேரா' படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.'ராயன்' படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். 'குபேரா' படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது.ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அதைத்தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், படத்தின் டீசரை வருகிற 15-ம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்னும் 5 நாட்களில் இப்படத்தின் முதல் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
Kubera is comingggg! 🥰#SekharKammulasKubera ❤️🔥#KuberaGlimpse in 𝟓 𝐃ays ⏳@dhanushkraja KING @iamnagarjuna @sekharkammula @jimSarbh @ThisIsDSP @AsianSuniel @KuberaTheMovie #Kubera #KuberaGlimpseOnNov15th pic.twitter.com/tmLDS4puC6
— Rashmika Mandanna (@iamRashmika) November 10, 2024