"தனுஷ் நடிப்பு பிரமாதம்" -விமர்சகர்களின் பாராட்டு மழையில் "குபேரா" .

kubera

தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி  ஜூன் 20ஆம் தேதி வெளியாகியுள்ள படம் குபேரா. இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் குறித்து விமர்சகர்கள்   தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் பெரும்பாலும் பாசிடிவான விமர்சனத்தையே கொடுத்து வருகிறார்கள். இது மாத்திரம் இல்லாமல், படத்தில் தனுஷ் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும், தனுஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் பலரும் கூறிவருகிறார்கள். வழக்கமாக, எந்த படம் வெளியானாலும் அந்த படத்தை முன்கூட்டியே பார்ப்பவர்கள், முன்கூட்டியே எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை வெளியிடுவது சகஜம். அப்படி, குபேரா திரைப்படத்தை பார்த்த சிலரும் எக்ஸ் தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
குபேரா படத்தை பார்த்த விமர்சகர் ஒருவர், முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார். இடைவேளை காட்சி மிகவும் சர்ப்ரைஸாக இருந்ததாகவும், திரைக்கதையை பொருத்தவரை எந்த குறையும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். 
தனுஷின் கதை தேர்வு நன்றாக இருப்பதாகவும், இடைவேளை காட்சி ஓகே-வாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தனுஷுடைய நடிப்பு மட்டும்தான் படத்தில் சிறந்ததாக இருப்பதாக ஒரு விமர்சகர்  தெரிவித்திருக்கிறார். 5க்கு 3 மார்க் படத்திற்கு கொடுக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Share this story