வசூல் மன்னனாக மாறிய "குபேரா"- திரைப்பட வெற்றி விழா கொண்டாட்டம்.

தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் குபேரா. தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியானது. வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலையில் அந்த படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடந்தது .
'குபேரா'' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இயக்குனர் சேகர் கம்முலா, விஜய் தேவரகொண்டாவை வைத்து ஒரு காதல் படத்தை உருவாக்க விரும்புவதாக கூறினார்
கம்முலாவிடம், காதல் படத்தை உருவாக்க விரும்புகிறீர்களா?, அப்படி எடுத்தால் எந்த நடிகரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்குவதாக கூறினார் .
சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ''லைப் இஸ் பியூட்டிபுல்'' படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
''குபேரா'' படத்தின் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தனுஷ், ''டூரிஸ்ட் பேமிலி'' போன்ற படங்களையும் மக்கள் விரும்புவதாக அப்படத்தை மேற்கோள் காட்டி பேசினார்.