"குபேரா" படத்தின் #TranceOfKuberaa டீசர் நாளை ரிலீஸ் ...!

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் #TranceOfKuberaa என்னும் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான 'போய்வா நண்பா' வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
Something you haven’t seen before ❤️🔥#TranceOfKuberaa is locked and ready🔒
— Kuberaa Movie (@KuberaaTheMovie) May 24, 2025
Releasing tomorrow! #Kuberaa in cinemas 20th June, 2025. #SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/aKCMwSxEaP
பான் இந்தியா அளவில் உருவாகி உள்ள 'குபேரா’ படத்தின்ன ஓ.டி.டி. உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ’குபேரா' படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, குபேரா திரைப்படத்தின் #TranceOfKuberaa என்னும் டீசர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.