வெளியானது யோகிபாபுவின் ‘குய்கோ’ பட டிரைலர்.

photo

யோகிபாபுவின் அட்டகாசமான நடிப்பில தயாராகியுள்ள படம் ‘குய்கோ’. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருள் செழியன் இயக்கத்தில் யோகிபாபு, விதார்த் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘குய்கோ’. படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள. படத்தின் டிரைலரில் கிராமத்தில் மாடு மேய்க்கும் வேலை செய்யும் யோகிபாபுவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வர, மாடு மேய்க்கும் ஒருவனுக்கு எனது தங்கையை திருமணம் செய்து தரமாட்டேன் என மறுத்துவிடுகிறார் அப்பெண்னின் அண்ணன். இதனால் வெளிநாடு சென்று ஒட்டகம் மேய்த்து பணக்காரராகி விடுகிறார் யோகிபாபு.

அந்த சமயத்தில் தாய் இறந்த செய்தி கிடைக்கு ஊருக்கு வரும் யோகிபாபுவுக்கு அதிர்ச்சி, தாயின் சடலத்தை காணவில்லை தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பதே மீதி கதை.

Share this story