‘குமரிமாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தின் அனல் பறக்கும் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர், ‘ஹே சினாமிகா’ எனும் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார், அதனை தொடர்ந்து தற்போது ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்ற பெயரில் ஒரு படத்தில் இயக்கியுள்ளார். அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அடியாட்களுக்கு இடையே நடக்கும் வன்முறையை மைய்யமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது.
எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியாஷிபு என்பவர் தயாரித்துல்ள இந்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகநாக நடிக்க வில்லனாக ஆர்.கே.சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் முனிஸ் காந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு என உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரில் ஜெயில் கதைகளத்தில் அனல் பறக்க கதை அமைந்துள்ளது. மாஸ் காட்சிகளுடம் கூடிய இந்த டிரைலரை நடிகர்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிரூத் அகியோர் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.