‘குரங்கு பெடல்’ திரைப்படம் புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வு

kurungu pedal
‘குரங்கு பெடல்’ திரைப்படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, அலையன்ஸ் பிரான்சே இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடக்கிறது. புதுவை அரசின் சிறந்த திரைப்படமாக ‘குரங்கு பெடல்’ திரைப்படம் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து ‘குரங்கு பெடல்’ திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணனுக்கு 2022-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை வழங்குகிறார்.‘‘குரங்கு பெடல்’ திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணன் சிறப்புரையாற்றுகிறார். விழா நிறைவில் ‘குரங்கு பெடல்’ திரைப்படம் திரையிடப்படுகிறது.தொடர்ந்து 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நாள் தோறும் ஒரு பிராந்திய மொழி திரைப்படம் மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. 5-ம் தேதி சனிக்கிழமை ‘ஆர்ஆர்ஆர்’ (தெலுங்கு), 6-ம் தேதி ‘அரியிப்பு’ (மலையாளம்), 7-ம் தேதி ‘டானிக்’ (வங்காளம்), 8-ம் தேதி ‘மேஜர்’ (இந்தி படங்கள் திரையிடப்படுகிறது. இத்திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.

Share this story