"எல் 2 எம்புரான்" : எதிர்பார்த்து காத்திருந்த மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

mohanlal

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது.

 

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ்,  சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


 இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரமான மோகன்லாலின் அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, மோகன்லால் இப்படத்தில் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

  mohanlal
 இப்படம் குறித்து பேசிய மோகன்லால், "லூசிஃபர் படத்தின் இறுதியில் ஸ்டீஃபன் நெடுப்பள்ளியான நான் குரேஷி ஆபிரஹாமாக அறிமுகமானேன். எம்புரானில் ஆபிரஹாம் யார்? என விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. எம்புரான் திரைப்படமே என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம் என நினைக்கிறேன். இப்படத்தில் மூன்றாம் பாகத்திற்கான தொடர்ச்சியை வைத்திருக்கிறோம். உங்களைப்போல நானும் மார்ச். 27 ஆம் தேதிக்குக் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

Share this story