டோவினோ தாமஸ் குறித்து "எல் 2 எம்புரான்" படக்குழு கொடுத்த அப்டேட்...!

எல் 2 எம்புரான் படத்தில் நடித்துள்ள டோவினோ தாமஸ்-ன் கதாபாத்திர போஸ்டரை எல் 2 எம்புரான் படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது.இப்படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.’லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
Character No.04
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) February 25, 2025
Tovino Thomas as Jathin Ramdas in #L2E #EMPURAANhttps://t.co/FhTqLVpjpB
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje… pic.twitter.com/kQ2aoTpHjZ
இந்நிலையில், டோவினோ தாமஸ்-ன் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் டோவினோ தாமஸ் நடிக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களை 18 நாட்களில் 'எல் 2 எம்புரான்' படக்குழு வெளியிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.