அடுத்தடுத்து அப்டேட்களை அள்ளிவிடும் 'எல் 2 எம்புரான்' படக்குழு ...!

empuran

எல் 2 எம்புரான் படக்குழு தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது.இப்படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது.  இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ்,  சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.’லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.   

 


 


இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களை 18 நாட்களில்  'எல் 2 எம்புரான்' படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் படத்தை இயக்கி நடித்துள்ள பிருத்விராஜ் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பிருத்விராஜ் Zayed Masood என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 


இறுதியாக மோகன்லால் கதாபாத்திர போஸ்டர் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் படக்குழு அவரின் கண்கள் மட்டும் இருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. 
 

Share this story