லால் சலாம் படத்தின் டீசர் நாளை மறுநாள் ரிலீஸ்

லால் சலாம் படத்தின் டீசர் நாளை மறுநாள் ரிலீஸ்

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போதைய தகவலாக படத்தின் ஹார்ட் டிஸ்க் செயல்படவில்லை என தெரிகிறது. பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் முன்னோட்டம் நாளை மறுநாள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

Share this story