‘லால்சலாம்’ படத்தின் ஆடியோ லான்ச் குறித்த அப்டேட்!

photo

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகிவரும் படம் ‘லால்சலாம்’. இந்த படத்தின் ஆடியோ லான்ச் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்துள்ளார். படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் நடித்துள்ளார். இந்த படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாத இறுதியில் சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story