அடுத்த குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா மக்களே!......- ‘லால்சலாம்’ ஆடியோ லான்ச் குறித்த தகவல்!
‘லால்சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது ஆடியோ லான்ச் குறித்த அப்டேட் வந்துள்ளது.
லால்சலாம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ ஆடியோ வாழாவில் ரஜினி குட்டி ஸ்டோரி கூறியது போல, இந்த விழாவிலும் சூப்பர் ஸ்டார் கலந்துக்கொண்டு குட்டி ஸ்டோரி சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.