தள்ளிப்போகிறதா ‘லால் சலாம்’- காரணம் என்ன?

photo

‘லால் சலாம்’ படத்தின் சூட்டிங் ஹார்ட் டிஸ்க்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தின் பணிகள் தாமதமாகியுள்ளது. இதனால் அறிவித்த தேதியில் படம் வெளியாகுமா? என சந்தேகம் நிலவுகிறது.

photo

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போதைய தகவலாக படத்தின் ஹார்ட் டிஸ்க் செயல்படவில்லை என தெரிகிறது.

அதாவது மும்பை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூட்டிங் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை எனவும் அதனை மீட்கும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளதாகவும் அதற்காக அமெரிக்காவிலிருந்து அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திவருவதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் படத்தை சொன்ன தேதியான வரும் பொங்களுக்கு ரிலீஸ் செய்வார்களாக என்ற கேள்வி  நிலவிவருகிறது.

Share this story