பொங்கல் ரேஸில் இணைந்த ‘லால் சலாம்’ – தமிழக வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய ‘ரெட் ஜெயண்ட்’.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள லால்சலாம் படத்தின் முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘லால் சலாம்’ இந்த படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்துள்ளார். கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் அவரது கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் பேசும் வீடியோ வெளியாகி நல்ல ரீச் ஆனது.
இந்த நிலையில் தற்போது,ம் படக்குழு லேட்டஸ்ட் அப்டேட்குகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரென் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.