லேபில் தொடர் நவம்பர் 10-ம் தேதி ரிலீஸ்

லேபில் தொடர் நவம்பர் 10-ம் தேதி ரிலீஸ்

ஜெய் நடித்துள்ள ‘லேபில்’ வெப் சீரியஸ் நவம்பர் 10ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடருக்கு 'லேபிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

லேபில் தொடர் நவம்பர் 10-ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில், ‘லேபில்’ வெப் சீரியஸ் நவம்பர் 10ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story