நான் சினிமாவிற்கு வரவில்லை என்றால், தனது லட்சியம் குறித்து கூறிய லேடி சூப்பர் ஸ்டார்...!

nayanthara


கேரளாவில் பிறந்து இப்போது தென்னிந்திய சினிமாவை ராஜ்ஜியம் செய்து வருபவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் ஒளிபரப்பான சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவர் தொகுப்பாளராக பணியாற்றி தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.2005ம் ஆண்டு தமிழில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவரின் பயணம் இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளது. லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கும்  நயன்தாரா, ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சென்றுள்ளார்.

nayanthara

நடிகை நயன்தாரா கொடுத்த ஒரு பேட்டியில் தான் சினிமாவில் நுழையவில்லை என்றால் எனது லட்சியத்தை நோக்கி பயணித்திருப்பேன் என கூறியிருக்கிறார்.அதில் அவர், ஒரு நாளும் நான் சினிமா துறையில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவேன் என்று எண்ணியதில்லை.சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நிச்சயமாக ஒரு Auditorஆக இருந்திருப்பார் என்று அடிக்கடி அவருடைய உறவினர்கள் கூட சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார். 

Share this story