கிறங்கடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...!
மாடர்ன் உடையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா காந்தக் கண்ணழகியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா. ஆரம்பத்தில் பப்ளியாக இருந்த நயன், பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறினார்.சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி உச்சத்தை தொட்டவர் நயன்தாரா. ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் அறம், மாயா, டோரா, ஐரா என தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றிகண்டார். இதனால் அவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது.
ஜவான் படத்தை தொடர்ந்து நயன்தாராவுக்கு பான் இந்தியா பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். கீது மோகன் தாஸ் இயக்கும் இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இதுதவிர தமிழிலும் நடிகை நயன்தாரா கைவசம் மூன்று படங்கள் உள்ளன. அதில் ஒரு படம் மண்ணாங்கட்டி. இப்படத்தை டியூடு விக்கி என்கிற யூடியூப்பர் இயக்கி உள்ளார். இதுதவிர சசிகாந்த் இயக்கியுள்ள டெஸ்ட் படத்திலும் நடித்து முடித்துள்ளார் நயன். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது கவினுக்கு ஜோடியாக ஹாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார்.
இப்படி 40 வயதிலும் செம்ம பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இன்னும் இளமை குறையாமல் இருப்பதே அவரின் மார்க்கெட் குறையாமல் இருப்பதற்கு காரணம். தன் அழகை மேலும் மெருகேற்றி தற்போது கை நிறைய ஆபரணங்களோடு, மாடர்ன் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து நடிகை நயன்தாரா நடத்தி உள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.