அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார்‌. அந்த வகையில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்', ஜெயம் ரவியுடன் 'இறைவன்' ஆகிய படங்களை முடித்துள்ள அவர், தனது 75வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

இந்நிலையில், அடுத்ததாக அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் நிறுவனம் இப்படத்தை இயக்குவதாக தெரிகிறது. படம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story