பள்ளிப்பருவத்தில் முதல் காதல் வந்தது - லட்சுமி மேனன்

பள்ளிப்பருவத்தில் முதல் காதல் வந்தது - லட்சுமி மேனன்

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். அடுத்தடுத்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சுந்தர பாண்டியன், மஞ்சப்பை, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பல ஹிட் படங்களில் நடித்தவர்,பின்பு படம் வாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.  4 ஆண்டுகளுக்குப் பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமா பக்கம் திரும்பினார். அண்மையில் சந்திரமுகி படத்தில் நடித்தார். 

பள்ளிப்பருவத்தில் முதல் காதல் வந்தது - லட்சுமி மேனன்

இந்நிலையில், பள்ளியில் படிக்கும்போதே காதலித்ததாக நடிகை லட்சுமி மேனன் தனது முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். காதலனுடன் வீட்டிற்கு தெரியாமல் தொலைபேசியில் அதிக நேரம் பேசியுள்ளதாகவும், ஒரு முறை கூட வெளியில் எங்கும் போகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story