பொங்கலுக்கு வெளியாகும் லஷ்மி மேனனின் ‘ஏ.ஜி.பி’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் லஷ்மி மேனன், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா’. ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் என்பவர் இயக்கியுள்ளார்.

புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கே.எஸ்.ஆர். ஸ்டுடியோ தயாரித்துள்ளது. சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்த இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு த்ரில்லரி கதைக்களத்தில் உருவாகியுள்ள டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

