லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஆர் யூ ஓகே பேபி’... ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு

AreYouOKBaby

 லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் லஷ்மி ராமகிருஷ்ணன். சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமான அவர், குணசித்திர வேடங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரோகணம், ‘நெருங்கி வா முத்தமிடாதே’, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

AreYouOKBaby

இதையடுத்து தனது 5வது படத்தை லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். ‘ஆர் யூ ஓ கே பேபி’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன், ரோபோ சங்கர், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜபாளையம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story