சென்னையில் பிரபல கல்லூரியில் நடைபெறும் லால் சலாம் இசை நிகழ்ச்சி

சென்னையில் பிரபல கல்லூரியில் நடைபெறும் லால் சலாம் இசை நிகழ்ச்சி

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் வெளியீட்டிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சென்னையில் பிரபல கல்லூரியில் நடைபெறும் லால் சலாம் இசை நிகழ்ச்சி

இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெறும் எனவும், சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

Share this story