புதுச்சேரியில் விறுவிறுப்பாக படமாகும் ‘லால் சலாம்’ ஷூட்டிங்.. சூப்பர் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த் !

ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. இதையடுத்து தற்போது புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி பஞ்சாலை வளாகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள துத்திப்பட்டு மைதானம், கோரிமேடு காவலர் மைதானம், லாஸ்பேட்டை மைதானம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#MoideenBhai spotted in Pondy
— R ??? J (@baba_rajkumar) June 1, 2023
Thalaivar Tharisanam#Lalsalaam #Rajinikanth?? #SuperstarRajinikanth pic.twitter.com/kpjheNo7FV
Wow Thalaivaaaaa ????????
— R ??? J (@baba_rajkumar) June 1, 2023
In Pondy #LalSalaam #moideenbhai #Rajinikanth?? #SuperstarRajinikanth pic.twitter.com/kEGSG6Nb8m