முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த ‘லால் சலாம்’ படக்குழு – கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்.

photo

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம் ‘படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

photo

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த 3 படத்தின் மூலமாக கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த கூட்டணியில் ‘வை ராஜா வை’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறியதால் அடுத்தடுத்து பல ஆல்பம் பாடல்களை இயக்கினார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தர்போது ‘லால்சலாம்’ எனும் படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்தில்  விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டியுள்ளனர் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Share this story