‘லியோ படத்தால் லாபமில்லை’ திருப்பூர் சுப்ரமணியம் கருத்துக்கு பதிலடி கொடுத்த 'லலித் குமார்'.

தளபதி விஜய்-லோகேஷ் கூட்டணியில் தயாராகியுள்ள லியோ படத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டை முன்வைத்தார், அது வைரலான நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் லியோ படத்தயாரிப்பாளர் லலித் குமார்.
அவர் கூறியதாவது” லியோ ஒரு வாரத்தில் ரூ 461 கோடி வசூலித்தது உண்மைதான் அதில் பொய் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, மேலும் லியோ படத்தை வெளியிட வேண்டும் என்றால் 80 சதவீத ஷேர் கொடுக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களை வற்புறுத்தியதாக வந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது எப்போது கேட்டும் ஷேர் தான் நாங்கள் கேட்டோம் சில தியேட்டரில் மட்டும்தாம் 80 சதவீதம் கேட்டோம், ஆனால் திருப்பூர் சுப்ரமணியன் ஏன் இப்படி பேசுகிறார் என எனக்கு தெரியவில்லை. லியோ கோவை வெளியீட்டு உரிமையை அவர்தான் கேட்டார் அனால், அதை வேறு ஒருவருக்கு விற்று விட்டோம் அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படி பேசுகிறார்” என பதிலடி கொடுத்துள்ளார் லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார்.