இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி... எந்த படத்தில் தெரியுமா ?

lalsalaam

 புதிய படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியராக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால்சலாம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

lalsalaam

இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படம் கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டது. 

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. காரைக்குடியில் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் ரஜினி அல்லாத காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அதன்படி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், இஸ்லாமியராக நடிக்கவுள்ளாராம். அவரது கதாபாத்திரத்திற்காக விரைவில் நீண்ட தாடி வளர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோன்று இந்த படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக ரஜினி நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.  

Share this story