கலை கட்டிய ‘தேர் திருவிழா’- அசத்தும் ‘லால்சலாம்’ ஃபஸ்ட் சிங்கிள்!....

photo

‘லால் சலாம்’ படத்தின் முதல் பாடலான தேர் திருவிழா பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது. வரும் பொங்கலுக்கு தயாராகும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தேர் திருவிழா லிரிக்கல்  பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Share this story