இயக்குனராகும் 'லப்பர் பந்து' பட நடிகை சஞ்சனா?
1737979823609

மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைப்' படத்தில் உதவி இயக்குனராக சஞ்சனா பணியாற்றியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த வதந்தி வெப் தொடரின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா. அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ’லப்பர் பந்து' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் நடிகை மட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கியுள்ள `தக் லைப்' படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சஞ்சனா இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.