லப்பர் பந்து ஓ.டி.டி. ரிலீஸ் - லீக் ஆன புது தகவல்
1728570945000

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. வெளியானது முதல் ஒவ்வொரு வாரம் அதிக திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படம் வருகிற 18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.