லாரன்ஸ் நடிக்கும் Benz படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்...!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் Benz படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
லியோ வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்... 'பென்ஸ்' படத்தின் பூஜை க்ளிக்ஸ் 📸
— சினிமா விகடன் (@CinemaVikatan) May 13, 2025
LCU-வில் இடம்பெறும் இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.#Benz | #RaghavaLawrence | #LokeshKanagaraj pic.twitter.com/BtvQmPjbqO
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகர் மாதவன், நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் இன்று புஜையுடன் தொடங்கியுள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.