எல்.சி.யு. : இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகரின் மகன்
லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது.
இதையடுத்து இப்படம் எல்.சி.யு. கதையில் உருவாகுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். பின்பு ராகவா லாரன்ஸின் பிறந்தநாளன்று கடந்த மாத 29ஆம் தேதி ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ராகவா லாரன்ஸின் லுக் இடம்பெற்றிருந்தது. எல்.சி.யு.வில் ரோலெக்ஸ் கதாபாத்திரம் பயன்படுத்திய கத்தி போல் லாரன்ஸ் கதாபாத்திரமும் ரத்த கறையுடன் இருப்பதாக காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே இப்படத்தின் கதாநாயாகிக்காக பிரியங்கா மோகன் மற்றும் சம்யுக்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கட்சி சேர’ மற்றும் ‘ஆசக் கூட’ ஆகிய ஆல்பம் பாடல் மூலம் கவனம் ஈர்த்த சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியினரின் மகனான சாய் அபயன்கர், இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
You are such a gentle and beautiful soul. Proud and Excited to collaborate for your debut movie. Welcome onboard for #Benz. This shall mark the beginning of our long journey together. Have a fabulous birthday @SaiAbhyankkar 🤗🤗
— Jagadish (@Jagadishbliss) November 4, 2024
pic.twitter.com/YfD0PG4jAa
இதைக்குறித்து அவர் பேசும்பொழுது " பென்ஸ் திரைப்படம் டார்க் காமெடி மற்றும் கமெர்ஷியல் டச்சுடன் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஒரு சர்வதேச இசையமைப்பை கொடுக்கவுள்ளோம். இதுவரை LCU படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரியளவில் ஹிட்டாகியுள்ளது. இதுவரை சாம் சி.எஸ் மற்றும் அனிருத் மட்டும் இசையமைத்த படங்களுக்கு நான் இசையமைக்கும் தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார்.