‘குட் பேட் அக்லி’ படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர்...?

gub

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் இடம்பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளன. 

 

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.குட் பேட் அக்லி படத்தில் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, சைனி டாம் சாக்கோ, அவினாஷ் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

 


இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடல் வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் யாராக இருக்கும் என்று அஜித்தின் ரசிகர்கள் தங்களது யூகங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த முன்னணி நடிகர் சிம்புவாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story

News Hub